/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பயாலஜிக்கல்' கழிவுகளை அகற்ற தனி 'இன்சினரேட்டர்கள்' தேவை
/
'பயாலஜிக்கல்' கழிவுகளை அகற்ற தனி 'இன்சினரேட்டர்கள்' தேவை
'பயாலஜிக்கல்' கழிவுகளை அகற்ற தனி 'இன்சினரேட்டர்கள்' தேவை
'பயாலஜிக்கல்' கழிவுகளை அகற்ற தனி 'இன்சினரேட்டர்கள்' தேவை
ADDED : ஏப் 09, 2025 05:10 AM
மதுரை : தனியார் மருத்துவமனைகளில் நாள்கணக்கில் தேங்கும் 'பயாலஜிக்கல்' கழிவுகளை எரிப்பதற்கு அந்தந்த மாவட்டங்களில் 'இன்சினேரட்டர்' எனப்படும் எரியூட்டும் இயந்திர மையம் அமைக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஆய்வகம், உள்நோயாளிகள் வசதி, மகப்பேறு சிகிச்சை, அறுவை சிகிச்சை வசதிகளுடன் செயல்படுகின்றன. மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் 'பயாலஜிக்கல்' கழிவுகளையும், ஊசி, சிரிஞ்ச், காயம் துடைத்த பஞ்சு போன்ற அனைத்தும் தனியார் ஏஜன்சிகள் மூலம் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், சென்னை உட்பட சில இடங்களில் மட்டும் எரியூட்டப்படுகிறது.
மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக தனியார் ஏஜன்சிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் 'பயோமெடிக்கல் வேஸ்ட் அக்ரிமென்ட்' செய்து மாதந்தோறும் ரூ.பலஆயிரம் வரை கட்டணத்தை ஏஜன்சிகளுக்கு வழங்குகின்றன. இந்த சான்றிதழ் இருந்தால் தான் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சான்றிதழ் வழங்கும். ஏஜன்சிகள் 48 மணி நேரத்திற்குள் மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் மருத்துவக்கழிவுகள் 48 மணி நேரத்திற்குள் அகற்றப்படாததே தனியார் மருத்துவமனைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகளான டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது :
மதுரை அருகில் உள்ள எரியூட்டும் மையத்தில் கழிவுகளை எரிப்பதற்கு பொதுமக்கள் அனுமதி மறுப்பதால் தென்மாவட்ட மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் சேர்கின்றன. கோர்ட், மாவட்ட நிர்வாகம் தலையிட்டும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. கழிவுகளை அகற்ற தாமதம் ஏற்படும் போது உப்பு, பார்மலின் கலந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி நாங்களே கழிவை எடுத்துச் செல்லும் வரை பாதுகாக்கிறோம்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
எனவே மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசும் இணைந்து மாற்று வழி ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மின்மயானங்களில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கு மட்டும் தனி எரியூட்டும் இயந்திரம் (இன்சினரேட்டர்) வாங்கி வைத்து பிரத்யேக அனுமதி தரலாம் என்றனர்.

