/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி போலீஸ் ஸ்டேஷன் 50 போலீசார் ஒதுக்கீடு

ADDED : பிப் 09, 2025 05:10 AM
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கென தனி போலீஸ் ஸ்டேஷன் (மீடியம்) உருவாக்கி, அரசு ரூ.75.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கென தனி போலீஸ் ஸ்டேஷன் இருப்பது போல் திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் தேவை என வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் இருந்தாலும் கோயில் தவிர இதர பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதை கருத்திற்கொண்டு கடந்தாண்டு ஜூனில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 'திருப்பரங்குன்றம் கோயிலுக்கென தனி போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி தனி ஸ்டேஷன் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.,க்கள், 5 ஏட்டுகள், 5 போலீசார், 5 கிரேடு 1 போலீசார், 36 கிரேடு 2 போலீசார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக பணி, போலீஸ் பணிகளுக்காக மொத்தம் ரூ.75.21 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.