ADDED : செப் 30, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தமிழகத்தில் காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, பாசிப்பயறு, பல மாவட்டங்களில் நெல் முதலாம் பருவம் என லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய செப்.30 (இன்று) கடைசி. இந்நிலையில் கடந்த ௨ நாட்களாக இந்தியா முழுவதும் சர்வர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இந்திய கம்யூ., விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட தலைவர் சந்தனம் கூறுகையில் ''அரசு இ சேவை மையங்கள் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வந்த நிலையில் சர்வர் இயங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்னதாக சர்வர் இயங்காமல் இருப்பது வாடிக்கையாகிறது. எனவே மத்திய அரசு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.

