ADDED : மார் 01, 2024 06:41 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரம் பாறைப்பத்தி கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த விவசாயிகள், விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள் இணைப்பை வலுப்படுத்தும் முகாம் நடந்தது.
மத்திய திட்ட வேளாண் துணை இயக்குநர் ராணி தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம், வேளாண்மைத்துறை திட்டங்கள் குறித்தும், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் பாலாஜி, எள் பயிரில் தொழில்நுட்பம், மதிப்பு கூட்டும் பொருள்கள் தயாரித்தல் குறித்தும் விளக்கமளித்தனர்.
மானிய திட்டங்கள் குறித்து உதவி வேளாண் அலுவலர் செல்வக்குமார் கூறினார்.
தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் மகாலட்சுமி, அழகர் ஏற்பாடுகள் செய்தனர்.

