/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானாவாரி நிலங்களில் கம்புக்கு பதிலாக எள்
/
மானாவாரி நிலங்களில் கம்புக்கு பதிலாக எள்
ADDED : பிப் 03, 2026 06:29 AM

எழுமலை: எழுமலை பகுதிகளில் 2025ல், ஆடிப்பட்டத்திலும் , தொடர்ந்தும் போதுமான மழை இல்லாததால் கார்த்திகை பட்டத்தில் சில நாட்கள் கிடைத்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் எள் பயிரிட்டுள்ளனர்.
எழுமலை, உத்தப் புரம், கோடாங்கிநாயக்கன் பட்டி, ஜோதில்நாயக்கனுார், எருமார்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்டத்தில் பெரும் பாலான விவசாயிகள் கம்பு பயிரிடுவர். அந்தப் பகுதி முழுவதும் கம்பு மண்டலமாக காட்சியளிக்கும்.
கடந்தாண்டு ஆடிப் பட்டத்தில் மழை கிடைத்ததால் உழவு செய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து சில மாதங்களாக மழை பெய்வது தாமதித்தது. கார்த்திகைப் பட்டத்தில் ஒருசில நாட்கள் கிடைத்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரியில் எள் பயிரிட்டுள்ளனர்.
தற்போது மழைப் பொழிவு இல்லாத நிலையிலும் பனிப்பொழிவு கிடைப்பதால் எள் செடிகள் நன்கு வளர்ந்து பூத்துக் காய்பிடித்து வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

