/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வடிகால் அடைப்பால் குடியிருப்புக்குள் கழிவுநீர்
/
வடிகால் அடைப்பால் குடியிருப்புக்குள் கழிவுநீர்
ADDED : மே 30, 2025 03:56 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 73வது வார்டு டி.வி.எஸ்., நகரில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்புக்குள் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.
டி.வி.எஸ்., நகர் லட்சுமி தெருவில் வஜ்ராஸ் அபார்ட்மென்ட்டில் 12 வீடுகள் உள்ளன. இதன் பின்புறமுள்ள வடிகாலில் 4 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன் கொசு உற்பத்தி பெருகுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்போர் கூறியதாவது: முன்பு வீடுகளுக்குள் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகாலில் இருந்து பாதாள சாக்கடைக்கு நேரடி இணைப்பு இருந்தது. பழங்காநத்தம் - டி.வி.எஸ்., நகர் மேம்பாலம் அமைந்தபின் பாதாள சாக்கடை இணைப்பில் தடைபட்டது.
இதன் காரணமாக வீட்டின் அருகே ரோட்டில் வடிகால் தொட்டி அமைக்கப்பட்டது. இப்பகுதியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டு புதிய ரோடு அமைக்கப்பட்டதில் அந்த தொட்டியும் சேதமடைந்து வடிகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் குடியிருப்புக்குள் பல நாட்களாக தேங்கியுள்ளது. நிலத்தடி நீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டது. கழிவுநீர் வரி முறையாக செலுத்தியும் வடிகால் பிரச்னை சரி செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக சேதமடைந்த வடிகால் மூடியை அகற்றி புதிய மூடி அமைக்க வேண்டும் என்றனர்.