/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அயோத்திபட்டியில்வயலில் செல்லும் கழிவுநீர்
/
அயோத்திபட்டியில்வயலில் செல்லும் கழிவுநீர்
ADDED : பிப் 01, 2024 04:20 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே உள்ளது அயோத்திபட்டி. இக்கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தங்கள் பகுதி வழியாக வரக்கூடாது என அடுத்தடுத்து உள்ள நிலத்தினர் அடைத்து வைப்பதால் தண்ணீர் தேங்கி வயல்வெளிகளுக்குள் தேங்குவதால் சுகாதர கேடு ஏற்படுகிறது.
அரசு: ஊருக்குள் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் தென்பகுதி ரோட்டோரமாக சென்று ஊருக்கு மேற்கில்ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கில்உள்ள ஓடைவழியாக செல்லும்.
மழைபெய்தால் சாக்கடை கழிவுநீர் தங்கள் நிலத்திற்குள் வருகிறது என ஒவ்வொரு பகுதியாக ஆங்காங்கே தடுத்து வருகின்றனர். ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுத்துகிறது. மழைக்காலத்தில் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது.
ஊராட்சி அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சரிசெய்து தரவேண்டும் என்றார்.