ADDED : ஜூன் 17, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தாமணி : மதுரை சிந்தாமணியில் கிருதுமால் நதியை கடந்து செல்ல புதிய பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் கண்ணன் காலனி, கிழக்குத் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு பணி நடக்கிறது.
ஒரு வாரமாக இப்பணிகள் நடக்கும் நிலையில் மாற்று பாதையில் முழுமையாக கழிவுநீர் செல்ல முடியாமல் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடங்களையும் கழிவுநீர் சூழ்ந்தது. இதனால் சமுதாயக் கூடத்தில் பள்ளி செயல்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கையால் பள்ளியில் தேங்கிய கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.