ADDED : அக் 30, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சி பெரியார் நகரில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
இங்குள்ள 2வது தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2.45 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. வடிகால் வசதி செய்து தரவில்லை. ரோட்டை சீராக அமைக்காததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குகிறது. கால்நடை கழிவுகள் மழைநீருடன் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சீராக அமைக்கப்படாத ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது. வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், ரோட்டில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.