ADDED : மார் 02, 2026 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கணக்கான நிழற்கூடங்கள் உள்ளன. இந்த பயணியர் நிழற்கூடத்தில் சுவர் முழுவதும்
அரசியல், திருமண போஸ்டர்களால் அசுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக சாலை விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்த படங்கள், விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்தால் அழகாகவும் பயனாகவும் இருக்கும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

