ADDED : ஜூலை 12, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோயில் தெருவில் தெரு நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்ததால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் வயதான பாட்டி, 6 வயது சிறுமி உட்பட 7 பேரை தெரு நாய் கடித்தது. சோழவந்தான் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் உலவுவதால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். ஆடுகளுக்கு ஏற்பட்ட நிலை குழந்தைகளுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம் என அவர்கள் கேள்வி எழுப்பினர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.