ADDED : செப் 17, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் விநாயகபுரம் காலனியில் நாய்கள் கடித்து நான்கு ஆடுகள் உயிரிழந்தன.
ஆடுகளின் உரிமையாளர் ஜெயராமன் கூறியதாவது: ஆடுகளை அருகே உள்ள தோப்பில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தேன். மன்னாடிமங்கலம் செல்லும் வழியில் இரட்டை வாய்க்கால் அருகே கோழி கழிவுகளை சாப்பிட தெரு நாய்கள் வருகின்றன. ஆடுகளைக் கண்ட 20க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறின.நான் விரட்டியபோது என்னையும் கடிக்க வந்தன. ஒரு சினையாடு உட்பட நான்கு ஆடுகள் இறந்துவிட்டன. இதேபோன்று இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலியாகின. நாய்களால் டூவீலர் விபத்துகளும் நடக்கின்றன. அதிகாரிகள் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.