/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரேக் பிடிக்காத பஸ்சால் அதிர்ச்சி
/
பிரேக் பிடிக்காத பஸ்சால் அதிர்ச்சி
ADDED : செப் 09, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை 10:45 மணிக்கு பூலாம்பட்டி வழியாக அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு அரசு பஸ் வந்தது. பஸ் ஸ்டாண்டுக்குள் வணிக வளாகம் முன்பாக பஸ் நிறுத்தப்பட்டது.
பின் பயணிகளுடன் பஸ் புறப்பட்டபோது 'பிரேக்' பிடிக்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் முன்பு தேவர் சிலை மணி மண்டப கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதுவது போல் சென்றது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஓடி தப்பினர். பஸ்சை டிரைவர் திருப்பிய போது பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே பயணிகள் காத்திருக்கும் பகுதியில் மோதியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.