/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறுவட்ட தடகளம்: கள்ளர் பள்ளி சாதனை
/
குறுவட்ட தடகளம்: கள்ளர் பள்ளி சாதனை
ADDED : ஜூலை 29, 2025 01:20 AM

உசிலம்பட்டி: கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் ஆர்.சி., சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் உசிலம்பட்டி குறுவட்ட தடகள போட்டிகள் நடந்தன. இதில் க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மாணவர்கள் பிரிவில் 127 வெற்றி புள்ளிகளை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் பிரிவில் 93 வெற்றி புள்ளிகள் பெற்று 2 ம் இடத்தையும் பெற்றனர்.
மாணவிகள் 17 வயது பிரிவில் சவுமியா 15 வெற்றிப் புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம், மாணவர்கள் 17 வயது பிரிவில் ஆதி கேசவன், சுந்தர் ஆகியோர் தலா 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 19 வயது பிரிவில் ஜீவா 15 வெற்றி புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், தலைமையாசிரியர் சரவணக்குமார், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அஜீத்பாண்டி, பெற்றோர் பாராட்டினர்.