/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
/
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
ADDED : அக் 07, 2025 08:46 AM
மதுரை : 'மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என்றால் வரும் டிசம்பரிலேயே நடத்த தயார்' என அரசு அறிவித்த நிலையில், 'ஆகம விதிப்படி கோவில் முழுதும் திருப்பணிகள் முடிந்த பிறகே நடத்த வேண்டும்' என, பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். 2018 பிப்., 2ல் கிழக்கு கோபுரத்தை ஒட்டியுள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், மண்டபம் முற்றிலும் உருக்குலைந்தது.
இதன் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருப்பதால், கோவில் கும்பாபிஷேகம் தள்ளி போகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், '2025க்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்' என்றார்.
ஹிந்துக்கள் எதிர்ப்பு
இதை தொடர்ந்து, திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. சில காரணங்களால் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முடிய தாமதம் ஆகலாம்.
இதற்கிடையில் கும்பாபிஷேகம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், '2026 ஜனவரிக்குள் நடத்தப்படும்' என, அறநிலையத்துறை தெரிவித்தது.
இரு நாட்களுக்கு முன் கோவிலில் ஆய்வு செய்த அத்துறை அமைச்சர், 'பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என பட்டர்கள் தெரிவித்தால், டிசம்பரிலேயே நடத்த தயார்' என அறிவித்தார்.
இதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோவில் முழுதும் திருப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஹிந்து அமைப்பினரும், பக்தர்களும் வலியுறுத்திஉள்ளனர்.
அரசுக்கு ஆபத்து வரும்
பட்டர்கள் சிலர் கூறியதாவது:
ஆகம விதிப்படி முழுமையாக திருப்பணிகள் முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அரைகுறை பணிகளுடன் நடத்தினால் அது பலன் அளிக்காது.
ஆளும் அரசுக்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 2009க்கு பின், 2021ல் கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும்.
ஆகம விதிப்படி, வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என்றால், இரு ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்திருக்கலாமே. தேர்தல் நெருங்குவதால் அதற்குள் நடத்த வேண்டும் என்பதற்காக அவசரகதியில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாமா என்று, பட்டர்களிடம் ஆலோசிக்கப்படும் என சில பட்டர்கள் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் கூறினார். அவர்கள், அரசு நியமித்த குழுக்களில் இருந்தவர்கள்; இருப்பவர்கள். அவர்கள் அரசின் முடிவுக்கு சாதகமாக தான் கருத்து தெரிவிக்க முடியும்.
'ஆகம விதிகளை மீறி நடத்தினால், அதற்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்' என அவர்கள் தெரிவித்தாலும் ஆச்சரியமில்லை. அரசின் நலன் கருதியும், கோவிலின் நலன் கருதியும் முழுமையாக திருப்பணிகள் முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.