/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்து விடுவோமா: திருமாவளவன் பேட்டி
/
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்து விடுவோமா: திருமாவளவன் பேட்டி
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்து விடுவோமா: திருமாவளவன் பேட்டி
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்து விடுவோமா: திருமாவளவன் பேட்டி
ADDED : ஆக 16, 2025 03:32 AM
மதுரை:மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்ததில் மகிழ்ச்சி. இது தேர்தலுக்கானதாக இருந்தாலும் வரவேற்கலாம். ஜி.எஸ்.டி.,முறையை முற்றிலும் கைவிட வேண்டும். பிரதமர்
ஒரு ஆர்.எஸ்.எஸ்., தயாரிப்பு. அவர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்.,ஐ பாராட்டியது ஏற்புடையதல்ல. ஹிந்து பெரும்பான்மை பேசி மக்களை பிரிக்கும் அமைப்பு அது.
துாய்மை பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. அவர்கள் மீது பதிந்த வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். அவர்களை போராட்டம் துவங்கிய 4 வது நாளில் சந்தித்தேன்.
முதல்வர், அமைச்சர் நேரு, தொடர்புடைய அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினேன். ஏதோ சில நிமிடங்கள் துாய்மை பணியாளர்களை தாமதமாக சந்தித்தவர்கள் எங்களை விமர்சிப்பது வேடிக்கையானது. துாய்மை பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பத்தனமானது.
அப்பணியாளர்கள் பிரச்னை என்பதைவிட இதை வைத்து தி.மு.க., கூட்டணியை உடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது முதன்மை கோரிக்கையாக இருக்க வேண்டும். இதை திருமாவளவன் தான் பேச வேண்டும் என சொல்வது சரியாக இருக்காது. அனைவரும் பேச வேண்டும்.
13 நாட்கள் போராடிய துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.,ஏன் போராட்டம் நடத்தவில்லை. கைது செய்த போதுதான் கடைசியாக அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க.,ஆட்சியில்தான் துாய்மைப்பணி தனியார் மயப்படுத்தப்பட்டது. இப்போது போராட்டம் நடத்துபவர்கள் அ.தி.மு.க.,தனியார் மயப்படுத்தியதைப் பற்றி ஏன் பேசவில்லை. அ.தி.மு.க.,செய்தால் அமைதியாக இருக்க வேண்டும். தி.மு.க.,செய்தால் எதிர்க்க வேண்டும் என்பது என்ன அரசியல் இது. இதுதான் அணுகுமுறையா.
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் இதில் அமைதியாக இருந்து விடுவோமா. எங்களை பொறுத்தவரையில் அக்கூட்டணியில் இருந்து கொண்டே துாய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எடுத்துச் சொல்கிறோம்; கோரிக்கை விடுக்கிறோம். த.வெ.க.,தலைவர் விஜய் பனையூரில் துாய்மைப் பணியாளர்களை சந்தித்துள்ளார். அவர் புது அணுகுமுறையை கையாள்கிறார். காலம் அவரை மக்களைச் சந்திக்க வைக்கும் என்றார்.