ADDED : அக் 08, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை டி.ஆர்.ஓ., காலனியில் லாரி மூலம் மாநகராட்சி குடிநீர் சப்ளை செய்து வருகிறது. 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாததால் ஏ, சி பிளாக்கில் குடியிருக்கும் பெண்கள் நேற்றிரவு அருகில் உள்ள கலெக்டர் பங்களாவை முற்றுகையிட்டனர். அப்போது கலெக்டர் பிரவீன் குமார் அங்கு இல்லை.
அவரது உதவியாளர் அருணிடம் கூறினர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.