/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு
/
திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு
திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு
திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு
ADDED : அக் 09, 2025 02:57 AM
மதுரை: மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையமான இ.பி.சி., மற்றும் 'செடா' எனும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இணைந்து, இங்கிலாந்து நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. மதுரை இ.பி.சி., நிர்வாகி ராஜ்குமார் வரவேற்றார். தலைவர் ராஜமூர்த்தி தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினரான வேளாண் விளைபொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி ஆணையமான 'அபேடா'வின் பிராந்திய தலைவர் ஷோபனா குமார் நிகழ்ச்சியில் பேசியதாவது:
இப்போது அமெரிக்காவில் விதிக்கப்பட்ட புதிய வரிகளால் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கவே இங்கிலாந்து, இந்தியா இடையே வரியில்லா வர்த்தகம் கையெழுத்தாகியுள்ளது.
ஏற்றுமதி துறையில் இளம் தலைமுறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. முக்கியமாக வேளாண் உற்பத்தி சார்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் பங்களிப்பும், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவும் மிக முக்கியமாக உள்ளது.
இந்தியாவில் இருந்து பழங்கள், காய்கறிகள், அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பதப்படுத்திய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. ஆனால், தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மிகவும் குறைவு.
இளம் தலைமுறையினர் வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி புதிய பொருட்களாக உற்பத்தி செய்தால், அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை 'அபேடா' பெற்றுத் தருகிறது.
உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ள இந்தியா, 2047ல் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதற்கு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.