ADDED : டிச 10, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 8, காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது.
நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் கவுன்சிலர் பூமாராஜா தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். நகராட்சி தலைவர் சகுந்தலா, அலுவலர்கள் சமரசம் செய்தனர்.
இதில் வார்டு கவுன்சிலர் பூமாராஜா அ.தி.மு.க., நகர் செயலாளர். நகராட்சி தலைவர் சகுந்தலா தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தவர்.