/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம்
/
குன்றத்தில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம்
ADDED : ஜன 02, 2025 05:18 AM
திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடந்தது.
விளாச்சேரி பூமி நிலா, வெங்கடேசப் பெருமாள் கோயிலில் உற்ஸவர்களுக்கு சிறப்பு அலங்காரமாகி பூஜை நடந்தது. தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு கல்களம்  தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
திருநகர் மகாலட்சுமி காலனி பெருந்தேவி தாயார், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்கு தங்க கவசம், உற்ஸவருக்கு  ஏகாந்த சேவை அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது. ஹார்விபட்டி சக்ர திரிசக்தி பீடத்தில் மூலவர் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை நடந்தது.

