ADDED : ஆக 13, 2026 05:21 PM
மதுரை: அரசின் தமிழ்நாடு இன்னோவேஷன் இனிஷியேடிவ் ஸ்கீம் (டானி) திட்டத்தின் கீழ் மதுரை புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தை முதல்வர் விஜய் காணொலியில் திறந்து வைத்தார்.
இங்கு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கருப்பையா, கோபிசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். செயற்பொறியாளர் கவிதா, திட்ட அலுவலர் பாலமுரளி பங்கேற்றனர்.
இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மையத்தை நவீனமயமாக்க ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் கட்டடம் புதுப்பிக்கப்பட்டன. மேம்பட்ட டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பங்கள், நிலையான எரிசக்தி வளங்கள், காலநிலை மற்றத்தை எதிர்கொள்ளும் திறன், உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலின் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளில் இம்மையம் கவனம் செலுத்தும். ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு திறன்மேம்பாடு, கேம்பஸ் டூ கார்ப்பரேட் திட்டங்கள், சான்றிதழ் பயிற்சிகள், புதிய தொழில் முனைவோர் பயிற்சி, ஸ்டார்ட் அப் ஊக்குவிப்பு, தொழில்துறை – கல்வி நிலையங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்துதல் இம்மையத்தின் நோக்கமாகும்.
