/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'எஸ்.ஐ.ஆர்.,' ஆலோசனை கட்சிகள் வெளிநடப்பு
/
'எஸ்.ஐ.ஆர்.,' ஆலோசனை கட்சிகள் வெளிநடப்பு
ADDED : நவ 02, 2025 04:02 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்த' (எஸ்.ஐ.ஆர்.,) ஆய்வுக்கூட்டத்தில் இருந்து காங்., கம்யூ., வி.சி., கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இக்கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. 'நோ எஸ்.ஐ.ஆர்.,' என்ற வாசகம் எழுதிய பதாகையுடன் காங்கிரசார் வந்தனர். வாக்காளர் சீர்திருத்தம் குறித்து மாறி மாறி கட்சியினர் கேட்டனர். 'பவர் பாயின்ட்' மூலம் விளக்கப்படும் என கலெக்டர் கூறியதற்கு அ.தி.மு.க., பா.ஜ., தவிர மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'எதிர்ப்பு இருந்தால் மனு கொடுங்கள்; தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறோம்' என்று கலெக்டர் கூறியதும் காங்கிரசார் மனு கொடுத்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். அடுத்ததாக இ.கம்யூ., மார்க்சிஸ்ட், வி.சி.க.,வினரும் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் கூட்டம் முடிந்த பின் சென்றனர்.
பயிற்சி நடந்தது தொடர்ந்து உலகத்தமிழ்ச்சங்கத்தில் கலெக்டர் தலைமையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான எஸ்.ஐ.ஆர்., சரிபார்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. சீர்திருத்தம் குறித்து எந்த கட்சிக்காரர்கள் கேட்டாலும் பதில் சொல்லும் வகையில் அலுவலர்கள் தயாராக அறிவுறுத்தப்பட்டனர். சீர்திருத்த படிவத்தை வீடு வீடாக வழங்கி படிவத்தை நிரப்பி வாங்குவது குறித்து விளக்கப்பட்டது. இதில் கட்சிக்காரர்கள் உதவி செய்யலாம். ஒருவர் அதிகபட்சமாக 50 படிவங்களை வாங்கி பூர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

