/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
/
நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
ADDED : நவ 02, 2025 04:03 AM

மதுரை: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிமைப்பு சார்பில் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரையில் நடந்தது.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை நிலஅளவை அலுவலர்கள் ஊர்வலம் சென்றனர்.
மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் சசிக்குமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தனர்.
நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு இணையவழி உட்பிரிவு பட்டாமாறுதலில் உள்ள பணிக்குறியீட்டினை குறைக்க வேண்டும். நில அளவர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டு பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நவ.18 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், செயலாளர் முத்து முனியாண்டி, மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் ரகுபதி, பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் திவ்யா பங்கேற்றனர். மாநில பொருளாளர் ஸ்டான்லி நன்றி கூறினார்.

