ADDED : நவ 20, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் நவ.20--: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம் துவக்கப்பட்டது. கவுன்சிலர் சுவிதா துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ணபாண்டியன் கலந்து கொண்டனர்.
இளைஞரணி அமைப்பாளர் விமல் கூறுகையில், ''எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்காக இம்மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு ஓட்டுச்சாவடிகளில் அதிகாரிகளிடம் கொடுக்கலாம். டிச.,3 வரை இம்முகாம் செயல்படும்'' என்றார்.

