ADDED : நவ 21, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகளுக்கான உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 36வது வார்டு கோமதிபுரம் பகுதியில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர்.,பணிகளில், அதற்குரியபடிவங்களை குடியிருப்பு வாசிகள் பெறுவதற்கு, படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், சங்க அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உதவும் பணியில் ஈடுபடுகின்றனர்.

