ADDED : நவ 06, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளர்களுக்கான சிறப்பு திருத்தப்பட்டியல் படிவம் வீடு வீடாக வழங்கும் பணிகள் நடக்கிறது.
வீடுவீடாக சென்று ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்கள் படிவங்களை வழங்கினர். பணிகளை ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் சுரேஷ், தேர்தல் தாசில்தார் கோமதி ஆய்வு செய்தனர். சில பகுதிகளில் தேர்தல் அலுவலர்களோடு தி.மு.க.,வினரும் உடன் சென்றனர்.
படிவத்தை பூர்த்தி செய்வது குறித்து அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர்.

