/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 6வது முறையாக எஸ்.ஐ., ஜாமின் மனு தள்ளுபடி
/
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 6வது முறையாக எஸ்.ஐ., ஜாமின் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 6வது முறையாக எஸ்.ஐ., ஜாமின் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 6வது முறையாக எஸ்.ஐ., ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : மார் 27, 2025 06:15 AM
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ., ரகுகணேஷ் 6வது முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
ரகு கணேஷ், '2023 செப்.,8ல் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின் 18 மாதங்களில் கீழமை நீதிமன்றத்தில் 4 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடந்துள்ளது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என 6வது முறை மனு செய்தார்.
நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார்.
சி.பி.ஐ., தரப்பு: கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. விசாரணை அதிகாரியிடம் தற்போது குறுக்கு விசாரணை நடக்கிறது. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நடந்துகொள்கின்றனர்.
மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
ஜாமின் அனுமதிக்க ஆட்சேபித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி மனு செய்தார்.
நீதிபதி: ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கீழமை நீதிமன்றம் விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.