/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
நாளை முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜன 03, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் சமய செல்வம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி காஞ்சிபுரம் தையூரில் நாளை(ஜன.,4) முதல் 7 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்க3 ஆண்டுகளுக்கு முன் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினராக இருக்க வேண்டும். கொத்தனார், வெல்டிங், எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், கம்பி வளைப்பவருக்கு பயிற்சி வழங்கப்படும். தினமும் ரூ. 800 வழங்கப்படும்.
நிறைவு நாளில் தேசிய திறன் மேம்பாட்டு கழக சான்றிதழ் தரப்படும். மேலும் விபரங்களுக்கு 94448 16342 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.