ADDED : ஜூலை 20, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஏற்றுமதி கழகத்தின் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துதல், சேமிப்பு, சிப்பமிடுதல் குறித்த இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மதுரை வேளாண் கல்லுாரி முதல்வர் மகேந்திரன் துவக்கி வைத்தார். உணவு பதன்செய் பொறியியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் நவீன இயந்திரங்களின் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். இணைப்பேராசிரியை ராமலட்சுமி, தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் அருளரசு, மனையியல் துறை உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி பேசினர்.