ADDED : டிச 13, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, மதுரை மாநகராட்சி சார்பில், மாநகராட்சி சேவை குறித்து புகார் தெரிவிப்பதை எளிதாக்கி நிவர்த்தி செய்ய, 100 வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை மேம்படுத்த 'ஸ்மார்ட் மதுரை' எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இச்செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, திடக்கழிவு சேகரிப்பு, ரோடு பராமரிப்பு உள்ளிட்ட புகார்களை அலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம். இதர சேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

