தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளியில் மாணவர்களை கடித்த விஷப்பாம்பு

பள்ளியில் மாணவர்களை கடித்த விஷப்பாம்பு

பள்ளியில் மாணவர்களை கடித்த விஷப்பாம்பு


ADDED : செப் 07, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் அருகே பள்ளியில் விஷப்பாம்பு கடித்த மாணவர்களை ஆசிரியர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

உறங்கான்பட்டி ரித்திக் சுரேஷ் 11, வெள்ளலுார் ஹரிஹரன் 11, இருவரும் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று மதிய உணவு வேளையில், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றனர். அங்கிருந்த விஷபாம்பு அவர்களை கடித்ததால், மாணவர்கள் இருவரையும் ஆசிரியர்கள் டூவீலரில் வெள்ளலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

டாக்டர்கள் அம்பலம் சிவனேசன், மதிவாணன் முதலுதவி சிகிச்சை அளித்து மாணவர்களை காப்பாற்றினர். மேல் சிகிச்சைக்காக மேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்ட ஆசிரியர், டாக்டர்களை பெற்றோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us