UPDATED : நவ 27, 2026 06:38 PM
ADDED : நவ 27, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளிச் செயலாளர் பொன் சுவாமிநாதன், தலைமையாசிரியர் செல்வராஜ் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இதில் மாணவர்களின் படைப்பாற்றல், அறிவியல் சிந்தனை, வரலாற்று அறிவு, சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்திய வரலாறு, புவியியல், பண்பாடு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகள், மாதிரிகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
