ADDED : நவ 27, 2026 06:38 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: ஏழை குடும்பங்களுக்கு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து கிராம ஊராட்சிகளில் சில மாதங்களாக கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று (நவ.,27) நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தில் இணையும் பயனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன.
திருமங்கலம் ஒன்றியம் மறவன்குளம், உச்சப்பட்டி, மேலக்கோட்டை, கப்பலுார் கிராமங்களில் கூட்டம் நடந்தது. கப்பலுார் கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துச்செல்வி தலைமை வகித்தார். தண்ணீர், சாலை, தெரு விளக்கு, அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
