/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய்களில் மண் அள்ளி விற்பனை; பதிலளிக்க கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : டிச 30, 2025 07:43 AM

மதுரை: மேலுார் தாலுகாவில் மண் அள்ளி விற்பதை தடுக்க கோரிய வழக்கில், கலெக்டர்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சேவுகன் தாக்கல் செய்த மனு: மேலுார் தாலுகா நரசிங்கம்பட்டி, கிடாரிபட்டி, அய்யங்குளம், அழகர் கோவில் கண்மாய்களில் சிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக சவடு மண் அள்ளி விற்பனை செய்கின்றனர். கண்மாய்களில் நீர் நிறைந்து காணப்பட்டாலும், விவசாய பயன்பாட்டிற்கு செல்ல வழி இல்லாமல் உள்ளது. விவசாயம் பாதித்துள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சட்ட விரோத குவாரிகளை தடை செய்ய வேண்டும். மண் அள்ளுவதை தடுக்க வேண்டும். நீர் நிலைகள் அழிக்கப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிரானது. கிராம மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலுார் தாலுகா பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் அமைத்து மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் , உறுதுணையாக உள்ள போலீசார், பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் , கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு: கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.