ADDED : டிச 08, 2024 04:47 AM
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு பசுமை மேலாண்மை திட்டம் நடந்தது.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்து 100 மாணவர்களுக்கு வேப்ப மரம், புங்கை மரம், கொடிக்காய் செடி விதைகளை வழங்கி மண்வளம், மண் அரிப்பை தடுக்க மரக்கன்றுகளை அதிகளவில் நட கூறினார்.
மாணவர்கள் வண்டியூர் கண்மாயில் மரக்கன்றுகளை நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேராசிரியர் பகவதி கலந்து கொண்டார். ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.
வேளாண் துறை சார்பில் மாணிக்கம்பட்டியில் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் நடந்த விழாவில் இணை இயக்குநர் சுப்புராஜ் பேசினார். வேளாண் கல்லுாரி இணை பேராசிரியர் பிரபாகரன்பேரூட்ட சத்துக்கள் குறித்து பேசினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, வேளாண் உதவி இயக்குநர் தெய்வேந்திரன், வேளாண் அலுவலர் சூரியபிரபா, அலங்காநல்லுார் ஒன்றிய செயலாளர் தனராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாணிக்கம்பட்டி ஊராட்சி தலைவி ஜெயமாலா கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் வசந்தகுமார் நன்றி கூறினார்.