ADDED : செப் 10, 2026 07:14 PM
சோழவந்தான்: வாடிப்பட்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நீரேத்தானில் மண்வள மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் ராணி மண்மாதிரி சேகரித்து அதனை பரிசோதித்து அதற்கேற்றவாறு பயிர் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வேளாண் உதவி இயக்குனர் பாண்டி வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். மண் பரிசோதனை நிலையத்திலிருந்து கலந்து கொண்ட ஜோஸ்பின்நிர்மலா மண் ஆய்வுக்கு மாதிரி எடுப்பது குறித்த செயல் விளக்கம், மண் ஆய்வு ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.
வேளாண் அலுவலர் டார்வின் வாடிப்பட்டி வட்டார வேளாண் கிடங்கில் விதைகள், நுண்சத்துக்கள், உயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதை விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் இந்திரஜித் விவசாயிகளின் தனித்துவ அட்டை எண் பதிவு, அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பூமிநாதன், அருணாதேவி ஏற்பாடுகளை செய்தனர்.
