/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீடுகளில் சோலார் மின்சாரம் அதிகபட்சம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் ரெடி
/
வீடுகளில் சோலார் மின்சாரம் அதிகபட்சம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் ரெடி
வீடுகளில் சோலார் மின்சாரம் அதிகபட்சம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் ரெடி
வீடுகளில் சோலார் மின்சாரம் அதிகபட்சம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் ரெடி
ADDED : செப் 18, 2025 05:17 AM
மதுரை : ''மதுரை மாவட்டத்தில் 2024 - 2027 ம் ஆண்டு வரை 27 ஆயிரம் வீடுகளில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு அதிகபட்சம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது'' என டான்ஜெட்கோ மெட்ரோ கண்காணிப்பு பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தெரிவித்தார்.
வீடுகளில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான சோலார் மின்சார பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரையில் சி.ஏ.ஜி., அமைப்பு சார்பில் நடந்தது. இதற்கான சோலார் ஆலோசனை மையம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைப்பு திட்ட ஆலோசகர் செல்வக்குமார் தெரிவித்தார்.
டான்ஜெட்கோ மெட்ரோ கண்காணிப்பு பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி,மெட்ரோ திட்ட செயற்பொறியாளர் பாலபரமேஸ்வரி கூறியதாவது: சோலார் முறையில் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வது எளிது. இதற்காக மத்திய அரசு ஒரு கிலோவாட் உற்பத்திக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட்டுக்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம் தருகிறது. இதற்கென குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வீடுகளில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் கூடினால் இரண்டு அல்லது மூன்று மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் சோலார் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். 3 கிலோவாட் உற்பத்தியை நிறுவினால் தினமும் 15 முதல் 20 யூனிட்கள் மின்சாரம் கிடைக்கும். மின்கட்டணம் வெகுவாக குறையும் அல்லது செலுத்த தேவையிருக்காது. கூடுதல் மின்சாரம் உற்பத்தியானால் 'கிரிட்' மூலம் சேமிக்கவும் முடியும். இதுகுறித்து செப். 24 ல் மதுரையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். என்றனர்.
யூனியன் வங்கி மேலாளர் சம்பத்குமார் கூறுகையில்,''வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வங்கிக்கடன் எந்தவித வருமானச் சான்றும் இன்றி தரப்படுகிறது. வட்டியும் 6 சதவீதம் தான்'' என்றார். ஒருங்கிணைப்பாளர் நளினி, நிர்வாகி பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.