ADDED : செப் 12, 2026 11:10 PM

மதுரை: தமிழறிஞர் சாலமன் பாப்பையா, 90, உடல், மதுரை தத்தனேரி மின்மயானத்தில், அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மதுரை, ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, தியாகராஜன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,க்கள் மதார் பதாருதீன், கோபிசன், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின், அவரது உடல் புட்டுத்தோப்பு சாலையில் உள்ள அவரது மனைவி உடல் அடக்கம் செய்யப்பட்ட சி.எஸ்.ஐ., வெப் மெமோரியல் சர்ச்சிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, இறுதிச்சடங்கு பிரார்த்தனை நடந்தது. காலை 10:00 மணி அளவில், தத்தனேரி மயானத்திற்கு ஊர்வலமாக உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு, அமைச்சர்கள் விஸ்வநாதன், நிர்மல்குமார், கலெக்டர் நிஷாந்த், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., முஸ்தபா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
மதுரை துணைமேயர் நாகராஜ் கூறுகையில், ''அவர் வசித்த தெருவிற்கு சாலமன் பாப்பையா பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என்றார்.
