ADDED : செப் 24, 2026 08:01 PM
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா நினைவு விழா, நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமையில் நடந்தது. கல்லுாரிச் செயலாளர் தசரதராமன் முன்னிலை வகித்தார். முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். பாப்பையா பெயரில் பட்டிமன்ற அணி சார்பில் அறக்கட்டளையை ராஜா துவக்கினார். கல்லுாரி துணைமுதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை, ஓய்வு பேராசிரியர்கள் சீனிவாசன், பிரபாகர், ராமசாமி, பாப்பையாவின் மகள் விமலா, புரட்சிப் பாவலர் மன்ற தலைவர் வரதராஜன் பங்கேற்றனர்.
திருநகர்: மக்கள் மன்றம் சார்பில் நினைவாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மன்ற தலைவர் செல்லா தலைமை வைத்தார். பாத்திமா கல்லூரி முன்னாள் துணை முதல்வர் விசாலாட்சி பேசினார். நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, பொன் மனோகரன், மாணிக்கராஜ், கவுன்சிலர் இந்திரா காந்தி, பேச்சாளர் மலர்விழி பங்கேற்றனர்.
