/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடுவது சாலச்சிறந்தது சாலமன் பாப்பையா கருத்து

ADDED : ஜூன் 02, 2025 01:04 AM
மதுரை: ''தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வாங்கித்தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை 'செம்மொழி தினமாக' கொண் டாடுவது சாலச்சிறந்தது,'' என, மதுரையில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.
தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்காக நேற்று முன்தினம் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மதுரை மாநகராட்சி முதல் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். நேற்று சாலமன் பாப்பையா மேயர் முத்துவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் அவர் கூறியதாவது: முன்னாள் மேயர் முத்து தமிழகத்தின் பொது சொத்து. அவர் 4 ஆண்டுகள் பணிபுரிந்த மதுரா கோட்ஸ் ஆலை முன் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது பெருமைக்குரியது.
திராவிட இயக்கம் வளர்ந்ததற்கு காரணமானவர்களில் ஒருவர். முன்னாள் முதல்வர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி கூட அவரது பேச்சை ரசித்து கேட்பார்கள். பகுத்தறிவாளரான அவரை ஓர் இனத்திற்கு உட்பட்டவராக பார்க்க முடியாது.
தமிழர்களின் உரிமைகளை, மொழியை நிலை நாட்டிய அண்ணாத்துறை, கருணாநிதியைப் போல செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது அபிமானம் இருந்தாலும் நான் அரசியல்வாதி இல்லை. புதுஜெயில் ரோட்டிற்கு 'முதல் மேயர் முத்து சாலை' என்று பெயர் சூட்ட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வாங்கித்தந்த கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஐ செம்மொழி தினமாக கொண்டாடுவது சாலச்சிறந்தது என்றார்.