ADDED : ஜன 13, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயா பாய் 88, நேற்று காலமானார். வயது முதிர்வால் சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்தார்.
மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி 4வது தெருவில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு அமைச்சர் தியாகராஜன், தளபதி எம்.எல்.ஏ., தாம்ப்ராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன் உட்பட பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் துவங்கியது. தத்தனேரி கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சாலமன்பாப்பையா - ஜெயாபாய் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.