ADDED : அக் 10, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி பகுதிக்கு குருவார்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் காற்று வெளியேறுவதற்காக கொட்டாம்பட்டியில் கட்டப்பட்ட தொட்டியினுள் கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதாரமற்ற தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கழிவுகள் அகற்றப்பட்டு, தொட்டி சுத்தப்படுத்தப்பட்டு சுகாதாரமான தண்ணீர் சப்ளை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.