ADDED : மே 13, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி மயானத்தில் 2021ல் ரூ.1.50 லட்சத்தில் கட்டப்பட்ட குளியல்தொட்டி சில மாதங்கள் மட்டுமே பயன்பட்டது. மயானத்தில் சேதமான 'பைப் லைன்' சீரமைக்கப்படாத நிலையில் கடந்தாண்டு ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் சுகாதார வளாகமும் இணைப்பு தராமல் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கிராம மக்கள் இறுதி சடங்கு செய்ய சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் குளியல் தொட்டி மற்றும் சுகாதார வளாகத்திற்கு பைப் லைன் இணைப்பு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.