ADDED : ஜூலை 23, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் அருகே நாராயணன் நகரில் பாசனத்திற்காக வடகரை கண்மாயிலிருந்து தேனுார் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் இணைப்பு கால்வாய் துார்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியது.
பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்காததால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. உடனடி நடவடிக்கையாக பேரூராட்சி அதிகாரிகள் அடைப்பை சரி செய்து தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.