ADDED : ஆக 22, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்:அரசுப்பன்பட்டி பகுதியில் 10 ஆயிரம் மூடைகள் விளைந்த நெல்லை வேளாண் துறை, வி.ஏ.ஓ., தவறாக கணக்கீடு செய்தனர்.
அதனால் கொள்முதல் நிலையத்தில் 7500 மூடைகள் முளைவிடும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் உத்தரவின் பேரில் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.