ADDED : நவ 12, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. விவசாயிகள் கிருஷ்ணன், மணி, சிதம்பரம், துரைப்பாண்டி, பாண்டி பேசினர்.
கூட்டத்திற்கு உயரதிகாரிகள் வரவேண்டும். பெயரளவில் அதிகாரிகள் கலந்து கொள்ளக்கூடாது. தும்பைபட்டி, பூதமங்கலம், செமினிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இதுவரை கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை.
நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளதில் தனிநபர் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும். நெட்டியேந்தல்குளம் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளதால் அதிகாரிகள் ஆய்வு செய்து குளம் உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

