/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உரிமம் முடிந்தும் செயல்படும் கல்குவாரிகளை கண்டுகொள்ளாதது ஏனோ; மதுரை கனிம வளங்களில் தொடரும் விதிமீறல்

ADDED : டிச 16, 2024 06:56 AM

வாடிப்பட்டி: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் முடிந்தும் செயல்படும் கல்குவாரிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை உள்ளது.
மாவட்டத்தில் பலநுாறு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உரிமம் முடிந்தவையும் பல உள்ளன. இவ்வகையில் வாடிப்பட்டி பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இங்குள்ள கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இப்பகுதி வகுத்துமலை வனப்பகுதியை ஒட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக குவாரிகள் பல செயல்பட்டு வருகின்றன. குவாரிகளுக்கு வாகனங்கள் சென்று வர தனிப்பாதைகள் இன்றி நீர்வரத்து ஓடை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதி தென்னை மரங்கள், பசுந்தீவனங்கள் உள்ளிட்ட விவசாயம் பாதித்துள்ளது. இப்பகுதியில் ராமையன்பட்டி பகுதியில் உரிமம் முடிந்த சில குவாரிகள் பலமாதங்களாக இரவு பகலாக கற்களை உடைத்து ஏற்றிச் செல்வதாகவும், இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர் ஞானசேகரன்: இப்பகுதி குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனுமதித்த அளவை விட கூடுதலாக பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உரிமம் முடிந்த கல் குவாரிகள், லாரிகள் இரவிலும் இயக்கப்படுகின்றன.
இதனால் அங்கு பணிபுரிவோர், இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. உரிய நடவடிக்கையை எதிர்பார்த்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.