/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழையும், கொரியாவையும் இணைக்கும் இலக்கியம் தென்கொரிய பேராசிரியர் பேச்சு
/
தமிழையும், கொரியாவையும் இணைக்கும் இலக்கியம் தென்கொரிய பேராசிரியர் பேச்சு
தமிழையும், கொரியாவையும் இணைக்கும் இலக்கியம் தென்கொரிய பேராசிரியர் பேச்சு
தமிழையும், கொரியாவையும் இணைக்கும் இலக்கியம் தென்கொரிய பேராசிரியர் பேச்சு
ADDED : ஜன 03, 2025 02:07 AM
மதுரை: ''கொரியா வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது'' என மதுரை உலகத் தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தென்கொரியா பேராசிரியர் ஆரோக்கியராஜ் பேசினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், கொரியா பண்டைய தொல்லியல், இலக்கிய ஒப்பீடு குறித்த கருத்தரங்கு நடந்தது. இயக்குனர் அவ்வை அருள் தலைமை வகித்தார்.
இதில் தென்கொரியா சேஜோங் பல்கலை உதவிப்பேராசிரியர் ஆரோக்கியராஜ் பேசியதாவது:
கொரியா வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழில் உயிர் எழுத்து மெய் எழுத்துகள் உள்ளது போல, கொரியா மொழியிலும் உள்ளது. இருமொழிகளுக்கும் நிறைய வார்த்தைகள், உச்சரிப்புகள் ஒத்துப் போகின்றன.
பொங்கல் பண்டிகை அங்கும் மாறுபட்ட முறையில் கொண்டாடப்படுகிறது. உணவுகளுக்குள்ளும் நிறைய ஒற்றுமை உள்ளது. கீழடி, ஆராய்ச்சி மற்றும் ஆதிச்சநல்லுார் ஆராய்சிகளில் கிடைத்துள்ள பண்டைய பொருட்களிலும் நிறைய ஒற்றுமை இருக்கின்றன.
முதுமக்கள் தாழி, செப்பேடுகள், தகடு, காசு போன்றவை உதாரணம். தமிழர் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகம் செய்துஉள்ளனர்.
8ம் நுாற்றாண்டில் நம் அரசர்கள், கொரியா, பெர்சியா, சீனர்களுடன் வணிக உறவு வைத்ததன் ஆதாரம் சீனா கல்வெட்டில் கிடைத்துள்ளது.
நாம் வணங்கும் முன்னோர் வழிபாடும் கொரியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது என்றார். மீனாட்சி மகளிர் கல்லுாரி பேராசிரியர் முனிப்பாண்டியம்மாள்,கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.