/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கோட்டை - ஈரோடு ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டிகளை இணைக்க வேண்டும் தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்

ADDED : மே 31, 2025 05:18 AM
மதுரை: மதுரை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - ஈரோடு - செங்கோட்டை ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால் கூடுதலாக பொதுப்பெட்டிகளை இணைக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி - ஈரோடு இடையே 10 பொதுப்பெட்டிகளுடன் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டன. கடந்தாண்டு ஜன., 24ல் இவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டன. செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் ரயில்(16846) மதியம் 3:00 மணிக்கு ஈரோடு செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 2:00 மணிக்கு புறப்படும் ரயில் (16845) இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது.
இரு ரயில்களும் தென்காசி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக 10 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளி பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
தென்காசி - ஈரோடு இடையே நேரடி ரயிலாக இந்த ரயில் மட்டுமே உள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. 438 கி.மீ., செல்லும் இந்த ரயிலில் உட்கார இடமின்றி கதவுகள் அருகே அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிப்பதால் கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பயணிகள் கூறியதாவது: முன்பு 10 பொதுப் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டும் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. தென்மாவட்டங்களில் இருந்து காலை, மாலை கல்வி, பணி நிமித்தமாக மதுரைக்கு வந்துசெல்வோர் இந்த ரயிலை நம்பி உள்ளனர்.
தினமும் நிற்க இடமின்றி பயணிக்கும் நிலையுள்ளது. எனவே 4 பொதுப் பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும் என்றனர்.
மே 25 முதல் மதுரை - செங்கோட்டை - மதுரை, செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை, மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை ஆகிய ரயில்களில் 2 பொதுப் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டன.