/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்ட எஸ்.பி., வழக்கு விசாரணைக்கு ஏற்பு

ADDED : டிச 28, 2024 06:56 AM
திருச்சி : நா.த.க., கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, திருச்சி எஸ்.பி., வருண்குமார் தொடர்ந்த மானநஷ்ட வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருக்கும் வருண்குமாரையும், அவரது குடும்பத்தாரையும், நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சித்தும், அவதுாறாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
மேலும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.பி.,க்கு எதிராக அவதுாறுகள் பேசி வந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருச்சி எஸ்.பி., வருண்குமார், திருச்சி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று மாஜிஸ்திரேட் பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், சீமானிடம், 2 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக, மாஜிஸ்திரேட் பாலாஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து விரைவில் நா.த.க., சீமான் உள்ளிட்ட, அவரது கட்சியினருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடும் என்று, எஸ்.பி., தரப்பு வக்கீல் முரளி கிருஷ்ணன் தெரிவித்தார்.